3வது மனைவியுடன் தகராறு… 2வது மனைவிக்கு பிறந்த மகளை கழுத்தறுத்து கொன்ற குடிகார தந்தை
நாகப்பட்டினம்: மூன்றாவது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள போலகம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (48). விவசாய கூலி தொழிலாளி.
இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பவானி, 2வது மனைவி சவுந்திர வள்ளி ஆகியோர் இறந்து விட்டனர். இதனை தொடர்ந்து உமாபதி என்ற பெண்ணை 3வதாக திருமணம் செய்து இருந்தார்.
இவரது 2 வது மனைவிக்கு பிறந்த மகள் சங்கீதா (16) போலகம் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு ராமகிருஷ்ணன் குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அவர் மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் உமாபதி கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார்.
வீட்டில் இருந்த சங்கீதா தந்தையை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் மகள் என்று பாராமல் சங்கீதாவின் கழுத்தை அரிவாளால் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது குறித்து திட்டச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் நாகை மாவட்ட எஸ்.பி அபினவ் குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசான் சாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இனியவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மகள் என்றும் பாராமல் குடிபோதையில் கொலை செய்த ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் திட்டச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications