குடிபோதையில் மோதிய சமையல்காரர்- கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்
சென்னை: சென்னை மதுரவாயலில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு சமையல்காரரை கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி, 5வது பிளாக் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை கல்லால் தாக்கப்பட்டு ரத்தம் வழிந்திருந்தது. ரத்தக்கறை படிந்த கல் ஒன்று அருகில் கிடந்தது. தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சமையல்காரர் அப்துல்கரீம் என்பது தெரியவந்தது. இவருக்கு ரம்ஜான்பீபி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு சம்பவம் நடந்த இடத்தில் அப்துல்கரீம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர் அப்துல்கரீமின் நண்பர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்துல்கரீம் வினோத் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் இருவரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஆத்திரம் அடங்காத வினோத் அருகில் கிடந்த கல்லை எடுத்து அப்துல்கரீம் தலையில் போட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அப்துல்கரீம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications