கள்ளக்காதலியின் 3 வயது மகளை அடித்துக் கொன்ற வாலிபர் – போலீசார் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கள்ளக்காதலியின் மூன்று வயது மகளை அடித்துக் கொலை செய்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட அடப்பகாரசத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாபுமணி. இவரது மனைவி நஸ்மா . இந்த தம்பதியின் ஒரே மகள் பிரியங்கா.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாபுமணி இறந்து விட்டார். இதையடுத்து நஸ்மாவுக்கு அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான மணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து நஸ்மாவும், மணியும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீட்டில் கணவன், மனைவி போல இருவரும் வாழ்ந்து வந்தனர்.
குழந்தை பிரியங்காவையும், நஸ்மா தன்னுடன் வைத்துக்கொண்டார். இதை தொடர்ந்து மணியுடன், நஸ்மாவும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மணி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் நஸ்மா குழந்தையை ஒப்படைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதிய வேளையில் நஸ்மாவிடம் செல்போனில் பேசிய மணி மாடியில் இருந்து தவறி விழுந்து பிரியங்கா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நஸ்மா வீட்டுக்கு ஓடி வந்தார். இதற்கிடையே அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் குழந்தையின் உடலை பரிசோதித்த போது 3 மணி நேரத்திற்கு முன்பாகவே குழந்தை இறந்து விட்டது என்று கூறி உள்ளனர். மேலும் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சுடப்பட்டிருப்பதையும் கண்டு பிடித்தனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த திருக்கோகர்ணம் போலீசாருக்கு மணி மீது சந்தேகம் எழுந்ததால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மணி அந்த குழந்தைக்கு நேற்று சூடு வைத்து சித்ரவதை செய்ததையும் ஒப்புக்கொண்டார். அதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications