பெற்ற தாயை பஸ் நிலையத்திலேயே கல்லைத் தலையில் போட்டு கொன்ற மகன் - முசிறியில்!
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி பேருந்து நிலையத்தில் வைத்து தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு திரணியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி தங்கம்மாள். இவர்களது மகன் சுப்பிரமணியன்.
பெரிய சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்பிரமணியன் மனநிலை பாதிக்கப் பட்டிருந்ததால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இதனால் தங்கம்மாள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். தங்கம்மாள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் சுப்பிரமணியன் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார்.
அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முசிறி புதிய பஸ்நிலையத்தில் சுப்பிரமணியன் சுற்றி திரிவதாக தங்கம்மாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு அவர் முசிறிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்றதும் சுப்பிரமணியனை பார்த்த அவர், வீட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டார். ஆனால் இரவாகி விட்டதால் பஸ் வசதி இல்லை. இதைத்தொடர்ந்து காலையில் செல்ல திட்டமிட்டு, மகனுடன் பஸ் நிலையத்திலேயே தங்கினார்.
இன்று காலை விடிந்ததும், தங்கம்மாள் மகனை அழைத்து கொண்டு வெள்ளூர் பஸ்கள் நிற்கும் பகுதிக்கு சென்றார். அப்போது சுப்பிரமணியன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். இருப்பினும் அவரது கையை இறுகப் பிடித்து அழைத்து சென்றுள்ளார்.
பஸ் நிலையத்தின் கழிப்பறை அருகே செல்லும் போது திடீரென ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், தங்கம்மாளை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அங்கு கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தங்கம்மாளின் தலையில் போட்டார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். சில பயணிகள் சுதாரிப்புடன் செயல்பட்டு சுப்பிரமணியனை மடக்கி பிடித்து கைகளை கயிறால் கட்டினர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சுப்பிரமணி யனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications