திருச்சி வாலிபர் மலேசியாவில் வெட்டிக் கொலை... கண்ணீருடன் உதவி கோரும் தாயார்!
திருச்சி: மலேசியாவில் வெட்டிக் கொல்லப்பட்ட திருச்சி வாலிபரின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாய் கலெக்டரிடம் அழுது கொண்டே மனு கொடுத்தார்.
திருச்சி கலெக்டர் அலு வலகத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிச்சாமி, டிஆர்ஓ தர்ப்பகராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அப்போது திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சரடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி தங்கப்பொண்ணு கலெக்டரிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார்.
அதில், "எனது மகன் வெங்கடேசன் கடந்த 4 ஆண்டுக்கு முன் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். கடந்த 3 ஆம் தேதி இரவு தனது மகனுடன் பணி புரியும் ரவி என்பவர் தனது மகள் சுந்தரிக்கு போன் செய்து, வெங்கடேசன் வங்கி யில் சம்பள பணம் எடுத்துக் கொண்டு டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது அவ் வழியாக வந்த 3 பேர் வெங் கடேசனை வழிமறித்து அரி வாளால் வெட்டி கொலை செய்து விட்டு ஓடி விட்டனர்.
போலீசார் உடலை மீட்டு மருத்துவமனையில் வைத்துள்ளதாக கூறினார். ஆனால் வெங்கடேசன் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து எந்தவிதமான தகவலும் பெற முடியவில்லை. எனது மகனின் உடலை மீட்டு இங்கு கொண்டு வரு வதுடன், உண்மையான நிலை என்ன என்று தெரியப்படுத்து வதோடு, இதற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
கலெக்டரிம் அவர் இந்த புகார் மனுவை கொடுத்து கதறி அழுதார். இதனையடுத்து கலெக்டர் விரைவில் உரிய விசாரணையுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications