மெரினா கடற்கரையில் வாலிபர் படுகொலை – போலீஸ் விசாரணை!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில், விவேகானந்தர் இல்லத்துக்கு எதிர்புறம் உள்ள மெரினா கடற்கரை உள்வட்ட சாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென 3 பேர் கும்பல் அவரை கொடூர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது.
சரமாரி கத்தி குத்து:
அந்த வாலிபர் அலறி அடித்தபடி தப்பித்து ஓட முயற்சித்தபோது, அந்த 3 பேரும் அவரை வளைத்து பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தினர்.
பொதுமக்கள் பதட்டம்:
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
ரத்த வெள்ளத்தில் மரணம்:
அந்த 3 பேர் கும்பல், அந்த வாலிபரின் வயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் சரமாரியாக குத்தியதால், அவர் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து கீழே விழுந்து இறந்தார்.
தப்பிய கொலையாளிகள்:
அவர் இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்த பின்னரே, கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவில்லை.
போலீசார் விசாரணை:
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மெரினா கடற்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். பின்னர், கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications