கர்ப்பிணி மனைவியுடன் கட்டாய உடலுறவு- மறுத்ததால் கொலை செய்த கணவர் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கர்ப்பிணியான மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலக்குண்டு காந்திநகர் லெனின் நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. அங்குள்ள ஒரு ஹோட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மாலதி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
4 மாத கர்ப்பமாக இருந்த மாலதியிடம் கடந்த 16 ஆம் தேதி மதியம் மணிகண்டபிரபு கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.
அதன்பின் குளித்து விட்டு வந்த மாலதியை மீண்டும் உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மாலதி சம்மதிக்கவில்லை. மணிகண்டபிரபு கட்டாயப்படுத்தியதால் மாலதி சத்தம்போட்டார். இதனால் மணிகண்டபிரபு போர்வையால் மாலதி முகத்தை அமுக்கினார்.
இதில் மூச்சு திணறிய மாலதி இறந்து விட்டார். இதனால் பயந்துபோன மணிகண்டபிரபு வீட்டை பூட்டிவிட்டு தப்பி சென்றார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்ட பிரபுவை தேடி வந்தனர்.
கொலை சம்பவத்துக்கு பிறகு மணிகண்டபிரபு பழனி அருகே உள்ள கோரிக்கடவுக்கு சென்று குலதெய்வத்தை வணங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் சென்றார். நேற்று மாலை அவர் அங்கிருந்து வத்தலக்குண்டுவிற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
இதனை அறிந்த போலீசார் அவரை காட்ரோடு பகுதியில் கைது செய்தனர். நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications