தொழிலில் நஷ்டம்: மனைவி, மகளைக் கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை
ராஜபாளையம்: ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் மனமுடைந்த ஒருவர் தன் மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். லட்சுமியாபுரம் பகுதியில் சொந்தவீடு கட்டுவதால், துரைசாமிபுரத்தில் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.

செந்தில்குமார் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்த செந்தில் கடந்த ஓராண்டாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை செந்தில் குமாரின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் போத்திராஜன் வீட்டில் செந்தில் குமார் தன் மனைவி மற்றும் 6 வயது மகளுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செந்தில் குமாரின் வீட்டில சோதனை நடத்தியபோது, செந்தில் குமார் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், முப்பிடாதி என்பவர் தனக்கு தர வேண்டிய ரூ.1 லட்சத்தையும் வீட்டு பீரோவில் உள்ள நகைகளையும் தனது மாமாவிடம் ஒப்படைக்குமாறு எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தங்கள் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications