இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் ”கொள்ளை” அடித்து ஆட்டோ வாங்கியவர் கைது!
திருப்பூர்: திருப்பூரில் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் கொள்ளை அடித்து அதன்மூலம் ஆட்டோ வாங்கி ஓட்டிக் கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள கொண்டரசம்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அலங்கியம் சாலையில் இருந்து ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால், ஆட்டோவை ஓட்டி வந்த வாலிபர் வண்டியை மட்டும் நிறுத்தி விட்டு இறங்கி வேகமாக பக்கத்தில் இருந்த சந்துக்குள் ஓடியுள்ளார்.
இதனால், சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று கொஞ்ச தூரத்தில் அவரை பிடித்தனர்.
பின்னர் தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மாசானமுத்து என்பது தெரியவந்தது.
மேலும் அவர், தாராபுரத்தில் உள்ள "யுனைடெட் இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 384 ரூபாயை கொள்ளையடித்தவர் என்பதும் தெரியவந்தது.
பின்னர் நடத்திய முறைப்படியான தொடர் விசாரணையில் மாசானமுத்து காப்பீட்டு நிறுவனத்தில் கொள்ளையடித்த பணத்தில் ஆட்டோ வாங்கி பூண்டு வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.
காப்பீட்டு நிறுவனத்தில் கொள்ளையடித்தபோது சிக்கிய டி.டி மற்றும் காசோலைகளை கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறிய அவர் மீது ஆழியாறு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications