நகை, பணத்திற்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இஸ்திரி கடைக்காரர்
தேனி: பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் பிரோஸ்கான்(35). அவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முண்டகயத்தில் இஸ்திரி கடை வைத்திருக்கையில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு அவர் உத்தமபாளையத்தில் குடியேறினார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்ட அவர் குடையந்தூரில் இஸ்திரி கடை வைத்துள்ளார்.
தனது கடைக்கு துணி தேய்க்க கொடுக்க வந்த ஒரு பெண்ணுடன் பிரோஸ்கானுக்கு பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணமாகவில்லை என்றும், பெற்றோர் இல்லை என்றும் அவர் அந்த பெண்ணிடம் பொய் கூறியுள்ளார். அவரின் பொய்யை நம்பிய அந்த பெண் பிரோஸ்கானுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது மனைவியை வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் வெங்கலூரைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திருமணம் செய்துள்ளார். மூன்று மனைவிகளையும் ஒருவருக்கொருவர் தெரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். தினமும் ஒரு மனைவியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். யாராவது ஒரு மனைவி இன்று இரவு ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டால் கடையில் தூங்கியதாக கூறி வந்துள்ளார்.
இந்த சூழலில் தான் அவரின் முந்தைய திருமணங்கள் பற்றி அவரின் 3வது மனைவிக்கு தெரிய வந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரோஸ்கானை கைது செய்தனர். நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். 3 பெண்களை அவர் திருமணம் செய்ய அவரின் அண்ணனும், அண்ணியும் உதவியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications