ஊட்டி: 4வது மனைவியை அடித்துக் கொன்ற குடிகார கணவர் கைது
நீலகிரி: தனது நான்காவது மனைவியை அடித்துக் கொலை செய்த மினி பஸ் டிரைவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி கிரீன்பீல்டு பகுதியை சேர்ந்த மினி பஸ் டிரைவர் துரை. இவருக்கு தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர், தேவிக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி அருகிலிருந்த மருத்துவமனையில் தேவியை அனுமதித்துள்ளார் துரை. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக இறந்தார்.
தேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, தேவியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். எனவே, துரை-தேவி தம்பதியினருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆவதால், இது வரதட்சனை சம்மந்தப்படதாக இருக்கலாம் என கருதி, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது
அதனைத் தொடர்ந்து, எஸ்.பி., அனிதா மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், தேவியை துரை தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. துரை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவரைக் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து ஊட்டி போலீசார் கூறுகையில்,"துரைக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. அவர் தேவியுடன் வசித்து வந்தாலும், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். இதனால், அவருக்கும் தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் துரை அடித்ததால் தான் தேவி இறந்துள்ளார்,' எனத் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications