சிறுமி தற்கொலை வழக்கு: பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
சிவகங்கை: சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 ஆயிரம் ருபாய் அபராதம் விதித்து சிவகங்கை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது 16 வயது மகள் 2006 ஏப்ரல் 23ல் வீட்டில் தனியாக இருந்தார். அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த நெருங்கிய உறவினர் பாக்கியராஜ்,30 சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றார். மனமுடைந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய் தார். சிவகங்கை தாலுகா போலீசார் பாக்கியராஜை கைது செய்தனர்.

பாலியல் தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக இவர் மீது சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை சிவகங்கை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயராஜ் விசாரணை மேற்கொண்டார்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில், பாக்கியராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய பாக்கியராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 5 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications