மனைவியுடன் ஓடிய கள்ளக் காதலன்… 7 மாதமாக தேடி, பிடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்
சென்னை: பணத்திற்காகவும், தங்க நகைக்காகவும் கொலை நடப்பது ஒருபுறம் இருக்க, தகாத உறவு முறைகளால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கள்ளக்காதலுக்காக சென்னையில் மீண்டும் ஒரு கொலை அரங்கேறியுள்ளது.
மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துச் சென்ற கள்ளக்காதலனை 7 மாதங்களுக்குப் பின்னர் தேடிப்பிடித்து கொலை செய்துள்ளார் ஆட்டோ டிரைவர் ஒருவர். கொன்று கால்வாயில் வீசிய அவரே போலீசில் உண்மையை கூறி சரணடைந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரூர் போரூர், பார்வதி அவென்யூ பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், தலையில் பலத்த காயங்களுடன் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், இறந்து போனது யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
திடீர் திருப்பமாக வாலிபரை கொன்றது தான்தான் என்று போரூர் காவல்நிலையத்தில் திங்கட்கிழமையன்று ஒருவர் சரணடைந்தார். தனது பெயர் செந்தில் என்றும் போரூர் அடுத்த தெருவீதி அம்மன் கோவில் வசித்து வருவதாகவும் போலீசில் கூறிய அவர், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவதாகவும் கூறினார். தனக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் இருப்பதாகவும் கூறினார்.
போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தான் கொலை செய்த நபரின் பெயர் நவீன் சுந்தர்(23) என்று கூறிய செந்தில், அவரும் ஆட்டோ ஓட்டும் தொழில்தான் செய்து வந்தார். தனது மனைவி நந்தினியுடன் நவீன்குமாருக்கு தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் நவீன்குமாரை போரூரில் பார்த்தேன் அப்போது ஏற்பட்ட தகராறில் தாக்கினேன், அவன் இறந்து போனான்.
கொலையை மறைப்பதற்காக மழைநீர் வடிநீர் கால்வாயில் தள்ளிவிட்டு சென்று விட்டேன். எப்படியும் போலீசில் கண்டுபிடித்துவார் என்பதால் சரணடைந்தேன் என்றும் செந்தில் கூறினார். கணவன், குழந்தைகளை விட்டு விட்டு தகாத உறவில் ஈடுபட்ட நந்தினியால் நவீன்குமார் கொலை செய்யப்பட்டதோடு செந்தில் கொலையாளியாகி சிறைக்கு சென்றுள்ளார். இதில் பாதிக்கப்பட்டது செந்திலின் இருகுழந்தைகள்தான். தந்தையும் சிறைக்குப் போய், தாயின் ஆதரவும் கிடைக்காமல் இன்றைக்கு அநாதையாகி நிற்கின்றனர்.


Click it and Unblock the Notifications
