ஏங்க தொகுதிக்கு வரலைன்னு கேட்டது குற்றமா.. எம்.எல்.ஏ கருணாஸ் புகாரில் ஒருவர் கைது!
தொகுதிக்கு வருவதில்லையே என கேட்டு, எம்எல்ஏ கருணாசிடம், போனில் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம்: தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாசிடம் கேட்டு தொலைபேசியில் தகராறு செய்த நபர் இப்போது போலீசில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளாராம்.
நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு சமீபத்தில்தான், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கினார், நடிகர் கருணாஸ். அதிருஷ்டவசமாக அதிமுக கூட்டணிக்கு அழைக்க, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அக்கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ்.

எம்எல்ஏவான பிறகும், சென்னையிலேயே தங்கிவிடுகிறார் கருணாஸ். தொகுதி பக்கம் அடிக்கடி செல்வதில்லை என தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், கருணாஸ் 2 நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார்.
"தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது" என அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அந்த நபர் கருணாசுக்கு மிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிரது. இதுகுறித்து கேணிக்கரை போலீசில் கருணாஸ் அளித்த புகாரின்பேரில், செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications