4 திருமணம்… 3 ஊரில் ஜாலி… ரூ. 2 கோடி சொத்துக்கள் அபேஸ்… கல்யாண மன்னன் கைது…
சென்னை: சென்னை, கோவை, குமரியில் விவகாரத்து பெற்ற பெண்களை இணையதளம் மூலம் வீழ்த்தி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் சீனிவாசனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). என்ஜீனியர்... இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு இவருக்கும் மதுரையை சேர்ந்த வனிதாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை ஊனமுற்றதாக இருந்தது.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010ஆம் ஆண்டு வனிதாவை சீனிவாசன் விவாகரத்து செய்தார். ஊனமுற்ற குழந்தையை மட்டும் தன்னுடன் வளர்த்தார்.
சென்னை பெண்
சென்னையை சேர்ந்த அபிநயாவை சீனிவாசன் திருமணம் செய்து திருமங்கலத்தில் வசித்து வந்தார். அடிக்கடி சீனிவாசன் வெளியூரில் தங்கினார். இது அபிநயாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
2 பெண்களுடன் திருமணம்
வீட்டில் இருந்த பழைய போட்டோக்களை அவர் பார்த்த போது சீனிவாசனுடன் மேலும் 2 பெண்கள் திருமண கோலத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிநயா இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கல்யாண மன்னன் கைது
போலீசார் சீனிவாசனை பிடித்து விசாரித்த போது கோவையை சேர்ந்த டாக்டர் சுமித்ரா, கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயா பிரின்ஸ் ஆகிய மேலும் 2 பேரையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது. அவர்களை அந்தந்த ஊரிலேயே வீடு எடுத்து சீனிவாசன் தங்க வைத்து உள்ளார்.
வாரம் 2முறை
வாரம் இரண்டு முறை அவர்களது வீட்டுக்கு சென்று சந்தேகம் வராமல் பார்த்துக்கொண்டார். அவர்கள் சந்தேகம் அடைந்து கேட்கும் போது வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டதாக சமாளித்தார். இதனால் சென்னை, கோவை, கன்னியாகுமரி என சீனிவாசன் ஜாலியாக வாழ்க்கை நடத்தி இருக்கிறார்.
விவகாரத்து பெற்ற பெண்கள்
ஏமாந்த டாக்டர் சுமித்ரா உள்பட 3 பேரும் ஏற்கனவே கணவருடன் விவாகரத்து பெற்றவர்கள் ஆவர். அனைவரையும் திருமண இணையதளம் மூலமே வலை விரித்து வீழ்த்தி உள்ளார்.
பரிதாபத்தில் ஏமாந்தனர்
ஊனமுற்ற மகனுடன் வாழ்ந்து வருவதாக சீனிவாசன் கூறியதால் நல்லவராக இருக்கலாம் என்று நினைத்து பரிதாபப்பட்டு அவரை திருமணம் செய்ததாக ஏமாந்த பெண்கள் கூறினார்கள்.
சொத்துக்களும் அபேஸ்
சீனிவாசன் திருமணம் ஆனதுமே அபிநயாவின் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் அவரது பெயரில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இதே போல் கோவை டாக்டர் சுமித்ராவின் ரூ.90 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் தனக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார். அவர்களது நகைகளையும் வாங்கி வைத்துக்கொண்டதாக தெரிகிறது.
பெண்கள் அதிர்ச்சி
கல்யாண மன்னன் சீனிவாசன் குறித்து கோவையில் உள்ள டாக்டர் சுமித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் சென்னை விரைந்து உள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயாபிரின்ஸ் வேலை சம்பந்தமாக துபாய் சென்று விட்டார். அவர் ஏமாந்து இருப்பது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோசடி மன்னன்
விவாகரத்தான பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி வலையில் வீழ்த்தியுள்ளான் சீனிவாசன். இந்த நான்கு பெண்கள் மட்டும்தானா? அல்லது மேலும் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளான என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications