துபாயில் இறந்த மானாமதுரை இளைஞரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.. நன்றி ஈமான்
திருச்சி : துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மானாமதுரை அருகேயுள்ள மூங்கிலூரணியைச் சேர்ந்த வேட்டையர் ஆறுமுகம் (45) டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 10.07.2018 அன்று உடல் நலக் குறைவால் துபாயில் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ஈமான் அமைப்புக்கு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து தர கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் ஜாஹிர், பஷீர், பசாம் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல தேவையான உதவிகளை விரைவாக செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவரது உடல் நேற்று 18.07.2018 புதன்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு 19.07.2018 வியாழக்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் அவரது மைத்துனர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேட்டையர் ஆறுமுகம் உடலை விரைவாக ஒப்படைக்க உதவிய ஈமான் அமைப்பு, அவர் வேலைபார்த்த நிறுவனம், இந்திய துணைத் தூதரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலர்கள் ஆகியோருக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதுபோன்று துபாயில் எதிர்பாராதவிதமாக மரணமடைபவர்களது உடல்களை துபாயில் அடக்கம் செய்யவோ அல்லது சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான உதவிகளை பெற 00971 50 51 96 433 / 00971 50 4753052 ஆகிய எண்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தகவல் - முதுவை ஹிதாயத்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications