சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து.. மன்சூர் அலிகான் அதிகாலையில் கைது
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகான் போலீசால் கைது செய்யப்பட்டார்.
சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகான் போலீசால் கைது செய்யப்பட்டார்.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் சென்ற வாரம் அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இதற்கு எதிராக தமிழ் நடிகர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சாலை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். இதனால் பல கோடி மரங்கள் தேவையில்லாமல் வெட்டப்படுகிறது. அரசு யாருக்கோ உதவி செய்ய இப்படி திட்டமிடுகிறது என்றார்.
இந்த நிலையில் சென்னை சூளைேமட்டில் மன்சூர் அலிகான் போலீசால் கைது செய்யப்பட்டார். சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்டார். சென்னை வந்த சேலம் போலீஸ் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications