சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை.. நிரம்பி வழிகிறது பக்கிங்காம் கால்வாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பக்கிங்காம் நிரம்பியது | தமிழகத்தில் 5 பேரை காவு வாங்கிய மழை- வீடியோ

  சென்னை: பல பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிகிறது.

  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. தாமதமாக தொடங்கினாலும் தனது வேலையை சரியாக செய்து வருகிறது வடகிழக்குப் பருவமழை.

  கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவம் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

  தத்தளிக்கும் சென்னை

  தத்தளிக்கும் சென்னை

  சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

  பக்கிங்காம் கால்வாய் வழிகிறது

  பக்கிங்காம் கால்வாய் வழிகிறது

  இதனால் சென்னை ஓட்டேரியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிகிறது. ஸ்டீபன்சன் சாலையில் வெள்ளத்தால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டீபன்சன் சாலை வழியாக பெரம்பூர், அயனாவரம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியாக தூர்வாராததால் ஒருநாள் மழைக்கே பக்கிங்காம் கால்வாய் நிரம்பியதாக புகார் எழுந்துள்ளது.

  பாலங்களை சூழ்ந்த வெள்ளம்

  பாலங்களை சூழ்ந்த வெள்ளம்

  சென்னை குரோம்பேட்டை பள்ளிக்கரணை பாலத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள பாலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

  குளமாக மாறிய சாலைகள்

  குளமாக மாறிய சாலைகள்

  கனமழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் குளங்களாக மாறியுள்ளன. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிக்கி வாகனங்கள், பழுதாகி நிற்பதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தாழ்வான இடங்களில் உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

  பணிமனைகளில் வெள்ளம்

  பணிமனைகளில் வெள்ளம்

  சென்னையில் கனமழை காரணமாக 32 பணிமனைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்துகள் பழுதாகி நிற்பதால் ஒவ்வொரு பணிமனையிலும் 25 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. சுரங்கப் பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  தரமணியில் 19 செ.மீ மழை

  தரமணியில் 19 செ.மீ மழை

  சென்னையில் அதிகபட்சமாக தரமணியில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 16 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அண்ணாபல்கலைக்கழகம் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புழல் ஏரி பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Many parts of Chennai got heavy rain thought the night and the buckingham canal is overflowing. In Chennai low lying areas surrounded by flood.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X