8 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய மெரினா.. போராட்டக்காரர்கள் அனைவரும் வெளியேறினர்
மெரினா கடற்கரை தற்போது ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. 8 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது மெரினா பகுதி
சென்னை: 8 நாட்களுக்கு பிறகு சென்னை மெரினாவில் போராட்ட சுவடு மறைந்து இயல்பு நிலை திரும்பியது.
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி போராட்டத்தை தொடர்ந்தவர்களை நேற்று காலை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் அறவழி களம், காவல்துறையினரின் நடவடிக்கையால் போர்க்களமாக மாறியது.

போராட்டக்காரர்களை வலுகட்டாயமாக போலீசார் வெளியேற்றி, மெரினா செல்லும் அனைத்து சாலைகளையும் அடைத்த போதிலும் கலைய மறுத்த இளைஞர்கள், கடற்கரையிலிருந்து கடலை நோக்கி சென்று அரண் அமைத்து மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு நேற்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மெரினாவில் நேற்று இரவு போராட்டக்காரர்களில் பெரும்பான்மையானோர் வெளியேறிவிட்டனர். இருப்பினும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200 பேர் அங்கேயே நின்றனர். அதில் 150 பேர் இன்று மதியத்திற்குள் போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்து திரும்பினர். எஞ்சிய 50 பேர் இன்று இரவு 7 மணியளவில் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்படனர். இதில் பலரும் நெல்லை, குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
மெரினா கடற்கரை தற்போது ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. 8 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது மெரினா பகுதி.












Click it and Unblock the Notifications