என்னை உயிரோடு எரிக்க முயன்றார் தந்தை... தங்கமகன் மாரியப்பன் பரபரப்பு தகவல்
சென்னை: என் தாயாரை சித்ரவதை செய்து என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்து எங்களை கைவிட்டுப் போன தந்தை தங்கவேலு இப்போது உரிமை கோருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை... என்னை மாரியப்பன் என்றே அழையுங்கள்.. மாரியப்பன் தங்கவேலு என அழைப்பதை விரும்பவில்லை என்று பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் கனத்த வேதனையுடன் கூறியுள்ளார்.
ரியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் தமிழக வீரர் மாரியப்பன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்த சரித்திரத்தைப் படைத்திருக்கிறார் தங்கமகன் மாரியப்பன்.
அவருக்கு பரிசுத் தொகைகள் குவிந்து வரும் நிலையில் இத்தனை காலம் கண்டுகொள்ளாத உறவினர்கள் 'உரிமை' கோரி வருவது மாரியப்பனை வெகுவாக பாதிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு மாரியப்பன் அளித்துள்ள பேட்டி:

தூக்கமின்றி தவிப்பு
நான்தான் உலகிலேயெ சந்தோஷமான மனிதன் அல்ல.. ரியோவில் இருக்கும் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கமின்றி தவிக்கிறேன்.

உரிமை கோருகிறார்கள்
ஏனென்றால் என் தாயார் என்னிடம் தொலைபேசியில் சொல்லும் தகவல்கள் அப்படியானவை... நான் இப்போது வென்ற வெற்றிக்கு தொடர்பே இல்லாதவர்கள் எல்லாம் தாயாரை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்..

குரு சத்யநாராயணா சார்தான்..
இதனால் என் தாயார் மிகவும் அச்சத்துடன் இருக்கிறார். என்னுடைய இந்த வெற்றிக்கு ஒரே காரணம் பயிற்சியாளர் சத்யநாராயணசார்தான்.

நெருக்கடி
எனது உறவினர்கள் என்னையும் எனது தாயாரையும் மதித்ததில்லை. ஆனால் இப்போது எனது தாயாரை நெருக்கிக் கொண்டிருப்பதாக என்னிடம் அவர் போனில் கூறி அழுகிறார்.

கைவிட்டுப் போன தந்தை தங்கவேலு
எங்களை பரிதவிக்க விட்டு சென்ற தந்தை தங்கவேலு இப்போது குடும்பத்தினரிடம் உரிமை கோருவதாக எனது தாயார் சொல்கிறார். எனது தாயை கருணையே இல்லாமல் துன்புறுத்தியவர் அவர்.

எரித்து கொல்ல முயற்சி
எந்த காரணத்தைக் கொண்டும் அவரை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு முறை என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்தார்.

ஐ ஆம் மாரியப்பன் ஒன்லி
எனது தாயையும் அவரது நான்கு குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றவருக்கு எனது மனதில் என்றுமே இடம் கிடையாது. நான் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. நான் வெறும் மாரியப்பன் மட்டுமே!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications