இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார் மார்க் ஜூக்கர்பெர்க்!
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதானதை அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதானதை அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த மோசடி குறித்து முக்கியமான பல தகவல்களை அவர் கொடுத்துள்ளார்.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள்தான் முக்கியம்
அவர் கொடுத்து இருக்கும் விளக்கத்தில் ''எங்களுக்கு மக்கள்தான் முக்கியம். உங்களுடைய அந்தரங்கங்களை பாதுகாப்பதுதான் எங்களுக்கு முக்கியம். உங்களுடைய தகவல்களை சரியாக பாதுகாக்க முடியவில்லை என்றால், நாங்கள் இந்த நிறுவனத்தை நடத்தவே தகுதி இல்லாதவர்கள்'' என்றுள்ளார்.

இனிமேல் நடக்காது
மேலும் ''இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இதுபோன்ற விஷயங்கள் இனி எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க போதிய முயற்சிகள் செய்து வருகிறோம். கண்டிப்பாக இனி இப்படி நடக்காது'' என்றுள்ளார்.

ஏற்கனவே திட்டம்
மேலும் ''ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்கவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்து இருந்தோம். மக்களுக்கு இந்த விஷயம் கண்டிப்பாக மகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் மீண்டும் எப்போதும் போல பேஸ்புக்கை பயன்படுத்தலாம் என்று உறுதி அளிக்கிறேன்.'' என்றுள்ளார்.

மன்னிப்பு கேட்டார்
முக்கியமாக ''இந்த விஷயம் நடந்தது பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கையை குறைத்து இருக்கிறது. பல மக்கள் பேஸ்புக் குறித்து வருத்தமான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications