ஜாம்பஜார் முன்னாள் ரவுடி மார்க்கெட் முரளி வெட்டிக் கொலை - சக ரவுடி புல்லட் குமரனுக்கு வலை!
சென்னை: சென்னை ஜாம்பஜாரில் பிரபல ரவுடியான மார்க்கெட் முரளி நேற்று கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலையில் மற்றொரு ரவுடியான புல்லட் குமரன் குடும்பத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அமீர் மஹால் அருகே உள்ள முகமது உசேன் தெருவை சேர்ந்தவர் முரளி. மார்க்கெட் முரளி என அழைக்கப்பட்டு வந்தார். போலீசாரால் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட அயோத்திக்குப்பம் வீரமணியின் கூட்டாளியான அவர் மீது ஆறு கொலை வழக்குகள் இருந்தன.

ஐந்து கொலை வழக்குகளில் விடுதலையாகிவிட்டார். ஒரு கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2006க்கு பின் முரளி மீது எவ்வித வழக்கும் இல்லை. அவர் ஜாம்பஜார் மார்க்கெட்டில் நான்கு கோழிக்கறி கடைகள், காய்கறி கடைகள், 20 கார்களுடன் டிராவல்ஸ் மற்றும் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வந்தார்.
ஜாம்பஜார் பகுதியில் பெரிய தொழில் அதிபர் போல் வலம் வந்தார். அவருக்கும் அதே பகுதியில் உள்ள புலிபோன் பஜார் பகுதியை சேர்ந்த ரவுடி புல்லட் குமரன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.முரளி திருந்தி வாழ முயற்சி செய்ததால் புல்லட் குமரனுடன் நட்பாக இருந்து வந்தார்.
ஆனால் முரளியின் குறுகிய கால வளர்ச்சி புல்லட் குமரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தானும் நட்பாக இருப்பதுபோல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி ஜாம்பஜாரில் உள்ள சித்திமுக்தி விநாயகர் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடு பணிகளில் முரளி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதிலும் புல்லட் குமரனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என கூறப்படுகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு கோவில் திருவிழா தொடர்பாக பத்திரிக்கை கொடுக்க புல்லட் குமரனின் வீட்டிற்கு முரளி சென்று உள்ளார்.
உடன் கேபிள் டிவி கட்டணம் வசூலித்து தரும் முருகன் என்பவரும் சென்றுள்ளார். அப்போது முருகனை கீழ்தளத்தில் காத்திருக்குமாறு தெரிவித்துவிட்டு முரளி மாடியில் உள்ள புல்லட் குமரனின் வீட்டிற்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து புல்லட் குமரன் மட்டும் கீழே வந்து "கோவில் திருவிழா தொடர்பாக சில கோப்புகளை முரளி பார்த்து கொண்டு இருக்கிறார். நீ கிளம்பு" என முருகனிடம் தெரிவித்து உள்ளார்.
மாலை 7 மணியாகியும் முரளி வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தார் தேடத் துவங்கினர். முருகனிடம் விசாரித்தபோது புல்லட் குமரனின் வீட்டிற்கு முரளி சென்றதை தெரிவித்து உள்ளார். இதையடுத்து புல்லட் குமரனின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிக்கிடந்தது. மாடி படிகளில் ரத்தக்கறைகள் படிந்து கிடந்தது.
வீட்டை உடைத்து பார்த்தபோது கழுத்து, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு மற்றும் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் கொடூரமான முறையில் முரளி கொல்லப்பட்டு கிடந்தார். ஜாம்பஜார் போலீசார் முரளியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ராயப்பேட்டை மருத்துவமனையிலும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறுகையில், "புல்லட் குமரன் மற்றும் அவரது நான்கு மகன்கள் தான் முரளியை தீர்த்து கட்டி உள்ளனர். நான்கு தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications