9ம் வகுப்பு படித்த இளைஞரை கரம் பிடித்த மருத்துவ மாணவி.. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
சென்னை: பெங்களூருவில் ரகசிய திருமணம் செய்து கொண்ட தஞ்சை காதலர்கள், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மகளிர் போலீசில் தஞ்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பார்த்திபன் (24). 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி. இவர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகனும், பூஜா (20) என்ற மகளும் உள்ளனர். பூஜா சீனாவில் டாக்டருக்கு படித்து வருகிறார்.

பூஜாவின் அண்ணன் கோகுலுக்கு பார்த்திபன் நண்பர் என்று கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் அடிக்கடி கோகுல் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது, பூஜாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சீனாவில் இருந்தபடியே செல்போன் மூலம் பார்திபனை தொடர்பு கொண்டுள்ளார் பூஜா. இதனால் அவர்களுக்கு இடையேயான காதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ள பூஜாவுக்கும் பார்த்திபனுக்கும் பெங்களூரில் வைத்து ரகசிய திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை இரவு இருவரும் சென்னை வந்தனர். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் பார்த்திபனும், பூஜாவும் தஞ்சம் அடைந்தனர். பாதுகாப்பு கேட்டு கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications