தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும்..சென்னை மெரினா போராட்ட குழு அறிவிப்பு
ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
சென்னை: ஜல்லிகட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டகுழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர்களின் பிரதிநிதிகள் 10 பேரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் சுமார் அரைமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஜல்லிக்கட்டை நடத்திய ஆக வேண்டும். காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பீட்டா அமைப்பை குறைந்தபட்சம் தமிழகத்தில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதல்வர் ஆதரவு தர வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். அமைச்சர்கள் முதல்வரிடம் பேசினார்கள். முதல்வர் இன்று முழு அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதன்பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மெரினாவில் கூடியிருந்தவர்களிடம் இதனை தெரிவித்தனர். முதல்வரின் அறிக்கைக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் மெரினாவில் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications