அரசியல் கட்சிகள் பாணியில் 'அம்மா' கூட்டத்துக்கு அமோகமாக ஆட்சேர்ப்பு.. பரபர திண்டுக்கல்
அரசியல் கட்சிகள் பாணியில் மாதா அமிர்தானந்தமாயி திண்டுக்கல் கூட்டத்துக்கு ஆட்கள் திரட்டப்படுவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
திண்டுக்கல்: மாதா அமிர்தானந்தமாயி திண்டுக்கல் கூட்டத்துக்கு ஊர் ஊராக சென்று ஆட்களை திரட்டுவதை பார்த்து அரசியல் கட்சிகளே ஆச்சரியப்பட்டு போய் நிற்கின்றன.
திண்டுக்கல்லுக்கு மாதா அமிர்தானந்தமாயி இன்று வருகை தருகிறார். திண்டுக்கல் அங்குவிலாஸ் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகளை அனுப்பி ஆட்களைத் திரட்டி வரும் பணியில் அமிர்தானந்தமாயி சீடர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு கிராமத்துக்கு 2 பேருந்துகள் என அனுப்பி வைத்து காலை முதலே ஆட்களை திரட்டும் பணியில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
பேருந்து வசதி மட்டுமின்றி இரவு சாப்பாடும் போடுகிறோம் வாருங்கள் என கூவி கூவி அழைக்கின்றனர். பாஜக ஆதரவாளர்களே அமிர்தானந்தமாயி கூட்டத்துக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் பணம், சாப்பாடு கொடுத்து கூட்டங்களுக்கு ஆட்சேர்க்கின்றனர். இந்த அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் அமிர்தானந்தமாயி கோஷ்டியினர் பேருந்துகளை அனுப்பி சாப்பாடு போடுவதாக கூறி ஆட்சேர்த்து வருவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications