சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் மதன் ஆஜர்... தாயார், இரு மனைவிகள் சந்திப்பு
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வேந்தர் மூவிஸ் மதன் ஆஜர்படுத்தினர். மதனின் தாயார் தங்கம், இரு மனைவிகளும் வேந்தர் மூவிஸ் மதனை சந்தித்து பேசினர்.
சென்னை: 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். மதனை திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை அழைத்து வரப்பட்ட மதனை அவரது வழக்கறிஞர் தினேஷ் சந்தித்து பேசினார்.
வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன். இவர், ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து நடத்தும் கட்சியில் மாநில நிர்வாகியாகவும் இருந்தார். கடந்த மே 28ம் தேதி ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு மதன் மாயமானார்.
அந்த கடிதத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க பணம் வாங்கினேன். அந்தப் பணத்தை நிறுவனர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டேன். இப்போது அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்கள் பணம் கேட்டு நெருக்குகிறார்கள். மேலும் நான் எடுத்த படத்தை எந்த பணமும் வாங்காமல்தான் வேந்தர் டிவிக்கு வழங்கினேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நான் வசூலித்த பணத்தை கடந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிக்காக செலவு செய்தேன். இப்போது நான் கங்கையில் ஜீவ சமாதியாகப் போகிறேன் என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

தேடிய போலீஸ்
இது குறித்து சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மதன் மாயமானவதற்கு பச்சமுத்துதான் காரணம். இதனால் அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் மதனை கண்டுபிடிக்கலாம் என்று மதனின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கூட்டாளிகள் கைது
இந்த வழக்கில் மதனை கண்டுபிடிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது. மதனை கண்டுபிடிக்காவிட்டால் சிபிஐக்கு வழக்கை மாற்றுவோம் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. இந்தநிலையில் எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்து, மதனின் கூட்டாளிகள் சுதீர், குணா உட்பட பலரை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதன் மட்டும் சிக்காமல் இருந்தார். அவரைப் பிடிக்க கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

மதன் கைது
மதனின் காதலி காயத்திரியிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி மதனை திருப்பூரில் தனிப்படை போலீசார் இன்று சுற்றிவளைத்து கைது செய்தனர். தற்போது அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

தாடியுடன் வந்த மதன்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வேந்தர் மூவிஸ் மதன் ஆஜர்படுத்தினர். சென்னை வந்த மதன் தாடியுடன் அடையாளம் தெரியாத அளவிற்கு காணப்பட்டார். மதனை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசினார். மதனின் தாயார் தங்கம், இரு மனைவிகளும் வேந்தர் மூவிஸ் மதனை சந்தித்து பேசினர்.

உயர்நீதிமன்றத்தில் தகவல்
இதனிடையே மதன் கைது செய்யப்பட்டு உள்ளதாக உயர்நீதிமன்றம் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் மதனை ஆஜர்படுத்த தயார் என நீதிபதிகளிடம் அரசு வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications