'பல்ஸை' பிடிக்கும் எடப்பாடி..நாளை மா.செ.க்கள் கூட்டத்தில் எடுக்க போகும் அந்த முக்கிய முடிவு இதுதானா?
சென்னை: பல்வேறு சாவல்களை எதிர்கொண்டு தற்போது அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை விவரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சி தலைமையை யார் கைப்பற்றுவது என்கிற சர்ச்சையில் ஓபிஎஸ்-ஐ வீழ்த்தி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். நீதிமன்றமும் இதனை உறுதி செய்துள்ளது. இப்படியாக சட்ட சவால்களை முறியடித்த எடப்பாடிக்கு கள சவால்கள் பல காத்திருக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி எடப்பாடியிடம் பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில்தான் தங்களுக்கு அதிக பலம் இருந்தது என்று இத்தனை நாட்களாக நினைத்திருந்த நிலையில் திமுக அதனை இந்த தேர்தல் மூலம் உடைத்தெறிந்தது.

இந்த தேர்தல் தோல்விக்கு, திமுகவின் 'ஃபார்முலா', ஆளும்கட்சியின் அரசியல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதிமுக தரப்பிலிருந்து சரியாக வேலை செய்யவில்லை என்பது மறுக்க முடியாத குற்றச்சாட்டாக இருக்கிறது. அதாவது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான மாவட்ட செயலாளர் கே.சி.கருப்பண்ணன் தேர்தல் நேரத்தில் 'சைலன்ட் மோடுக்கு' சென்றுவிட்டார். சரி முன்னாள் மாஜிக்களாவது எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், கார் தொகுதிக்குள் போனதே தவிர கால் எதுவும் கீழிறங்கவில்லை. ஆக இவையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் உட்கட்டமைப்பை இறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தெளிவாக எடப்பாடிக்கு தெரிந்தது.
மறுபுறம் செல்லூர் ராஜூvsஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன்VSநத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம்VSகே.சி.முனுசாமி என இந்த VS பட்டியில் நீண்டுக்கொண்டிக்கிறது. ஆக நாடாளுமன்ற தேர்தலை வைத்துக்கொண்டு இப்படி சண்டையிட்டுக்கொண்டிருந்தால் அது எதிர் தரப்பினருக்குதான் பலமாகிவிடும் என்பதால் இந்த விவகாரங்களை முடிவுக்கு கொண்டுவர தொடர் முயற்சியை எடப்பாடி கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே உட்கட்சி பிரச்னை எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் தரும் குடைச்சல் இந்த தலைவலியை இரட்டிப்பாக்கியுள்ளது.

வரும் 23ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டை ஓபிஎஸ் சிறப்பாக நடத்த திட்டமிட்டிருப்பதால் ஈபிஎஸ் தரப்பு தற்போது லேசான கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெில் ஈபிஎஸ்-க்கு கொங்கு மண்டலத்தில் இருக்கும் அளவுக்கு தென் மண்டலத்தில் பலம் கிடையாது. அப்படி இருக்கையில், சமீபத்திய இடைத்தேர்தலில் கொங்கு மண்டலத்திலேயே கோட்டை விட்டதால் இதனை பயன்படுத்தி ஈபிஎஸ்-ஐ பலவீனமான தலைவராக 'புரொக்ஜெக்ட்' செய்ய இந்த மாநாட்டை ஓபிஎஸ் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சவாலையும் சமாளிக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்று மாநாடுகள் நிச்சயம் பலன் அளிக்கக்கூடியவைதான்.
எனவே ஓபிஎஸ்-ன் தந்திரத்தை முறியடிக்க ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் தென் மாநிலங்களிலும் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்துவிடலாம் என்பதுதான் இவருடைய திட்டம். இப்படி இருக்கையில்தான் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. ஓபிஎஸ் நெருக்கடி, திமுக அரசியல், பாஜக உரசல் என பல பஞ்சாயத்துகள் இருந்தாலும் 2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி மட்டுமே நாம் இப்போது செல்ல வேண்டும் என்று எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.
எனவே இந்த கூட்டத்தில் தேர்தலுக்காக ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை பாஜக டார்கெட் செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். ஆக கூட்டணி கட்சிகளே இவ்வளவு வேகமாக இருக்கையில் அதைவிட வேகமாக இயங்க வேண்டும் என்கிற நெருக்கடியில் ஈபிஎஸ் தரப்பு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்கும் பெரிய தேர்தல் இது என்பதால் தனது தலைமையை நிரூபிக்க இந்த தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

எனவே இதன் தொடக்கமாக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. என்னதான் நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், மாநாடு அறிவிப்பை வெளியிட்டாலும், மா.செ-க்கள் கூட்டம் நடத்தினாலும் தேர்தல் ஆணையம் அதிமுகவின் திருட்டப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி உண்மையான அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது.. அதனால், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் அதிமுக வழக்கும் தொடர்ந்துள்ளது.. ஆனால், அதுகுறித்த தன்னுடைய முடிவை நாளைய தினம் அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம்.. மற்றொருபுறம், கர்நாடகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாளாகும் என்பதால், அதிமுக தேர்தலில் போட்டியிடுவது சிக்கல் என்றே தெரிகிறது.. எனினும், நாளைய தினம், நடக்க போகும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இதுகுறித்து நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளாராம் எடப்பாடி.. அத்துடன், பாஜகவுடன் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது குறித்தும் அவர்களிடம் கருத்து கேட்க உள்ளாராம்.. அந்தவகையில், நாளை நடக்க உள்ள மா.செ.கூட்டம் மிகுந்த பரபரப்பை அதிமுகவில் ஏற்படுத்தி வருகிறது.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications