தேர்தலன்று தமிழகம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்- ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நாளான மே 16 ம் தேதியன்று அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகார் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்சபைக்கு தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் இன்று வரை பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக 1,48,390 புகார்களும், தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 440,95 புகார்களும் பெறப்பட்டன.
சுவர்களில் எழுதியது தொடர்பாக வந்த 1,01,206 புகார்கள் சுவரில் எழுதியதை அழித்து விட்டதால் முடிவுக்கு வந்தன. பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக 887 வழக்குகளும், தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்தாக 208 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் தவறாக வாகனத்தை பயன்படுத்தியதால் 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நாளான 16.05.2016 அன்று அனைத்து தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும். தேர்தல் நாளில் விடுமுறை வழங்கப்படுவதால் நிறுவன பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க உறுதி கொள்ள வேண்டும்.
வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவது தொடங்கப்பட்டு இக்குறுகிய நாட்களில் இதுவரை 38 ஆயிரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் வரும் தேர்தல் செய்திகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தேர்தல் பணியாற்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications