சரசரவென வந்து.. திடீரென பேருந்தில் ஏறிய கலெக்டர்.. என்ன செய்தார் தெரியுமா? செம காரணம்!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: இரண்டாவது வாரமாக வீட்டிலிருந்து அரசு பேருந்து மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பயணம் மேற்கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது.

Recommended Video

    மயிலாடுதுறை: அரசு பேருந்தில் பயணம், நடைபயணம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்சியர்!

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஓர் நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அடிக்கடி சைக்கிள் பயணம் செய்ய கூடியவர்.

    சுற்றுசூழல், உடல் ஆரோக்கியம் இரண்டையும் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அடிக்கடி சைக்கிளிங் செய்வார்.

     ஸ்டாலின்

    ஸ்டாலின்

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் கூட சைக்கிளிங் செய்வது வழக்கம். இந்த நிலையில் சுற்றுசூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம் திங்கட்கிழமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா தனது வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தில் சென்றார். பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்று அங்கு இருந்து அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார்.

    சைக்கிளிங்

    சைக்கிளிங்

    கடந்த வாரமே இவர் பேருந்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் அவர் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் வேகமாக நடந்து வந்து பேருந்துக்கு காத்திருந்து, திடீரென பேருந்து ஏறி அலுவலகம் சென்றார்.

    ஆட்சியர் லலிதா

    ஆட்சியர் லலிதா

    திடீர் என்று மாவட்ட ஆட்சியர் இப்படி பேருந்தில் வந்ததை பார்த்து பலரும் வியந்து போனார்கள். இவர் பேருந்தில் நின்றபடி பயணம் மேற்கொண்டார். மகளிருக்கான விலையில்லா பேருந்து பயண திட்டத்தில் பொதுப் பேருந்தில் பயணம் செய்து பின்னர் அலுவலகத்திற்கு பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து சென்றார்.

    பேருந்து பயணம்

    பேருந்து பயணம்

    பேருந்து பயணத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் அரசு அலுவலர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். இது காற்று மாசை குறைக்க பயன்படும். மக்கள் மாஸ்க் அணிந்து பேருந்தில் செல்ல வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார். அவருடன் அரசு அதிகாரிகள் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+