மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் காதலனை கருகவிட்ட பெண்.. காவிரி ஆற்றுக்கு ஓடிய இளைஞர்! ஓஹோ, இதுதான் விஷயமா
மயிலாடுதுறை: காதலனையும் எரித்து, தன்னையும் எரித்து கொண்டுவிட்டார் அந்த பெண்.. மயிலாடுதுறை மக்கள் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. இவர்களிடம் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளார். யார் இந்த ஜோடி? என்ன நடந்தது?
மயிலாடுதுறையில் வசித்து வரும் 24 வயது ஆகாஷ், பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் வருடம் படித்து வருகிறார்.. இவர் மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் BA பொருளாதாரம் 2வது வருடம் படித்து வரும் 22 வயது சிந்துஜாவை காதலித்து வந்தார். இது 2 வருட காதல் ஆகும்.

கல்லூரி: எப்போதுமே ஆகாஷ், மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து பூம்புகாருக்கு பஸ்சில் செல்வாராம்.. 2-ம் வருடம் படிக்கும்போதுதான், முதன்முதலாக சிந்துஜாவை சந்தித்துள்ளார்.. புவனகிரியில் இருந்து மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இறங்கி காலேஜூக்கு போவாராம் சிந்துஜா.. ஒருநாள் இருவருமே நேருக்கு நேர் சந்தித்து, காதல் இருதரப்பிலுமே மலர்ந்துள்ளது.
2 பேருமே உருகி உருகி காதலித்தனர்.. தினமும் பஸ் ஸ்டாண்டில் சந்தித்து கொள்ளாமல், இருவரும் காலேஜ் போவது கிடையாதாம்.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு பெண்ணுடன், ஆகாஷ் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்து சிந்துஜா பதறிப்போய்விட்டார்.. அந்த பெண் யார்? என்று ஆகாஷிடமே கேட்டிருக்கிறார்.
தோழி: தன்னுடைய தோழி என்று ஆகாஷ் சமாளித்து சொன்னாலும், சிந்துஜாவுக்கு சந்தேகம் தீரவில்லை.. போதாக்குறைக்கு சிந்துஜாவிடம் முன்பைபோல பேசுவதும், பழகுவதும் குறைந்துள்ளது.. இதனால், மேலும் பதற்றமடைந்த சிந்துஜா, என்னை ஏமாற்றிவிடாதே என்று சொல்லி கொண்டேயிருந்தாராம். ஆனால், ஆகாஷோ, அந்த பெண்ணுடன் தனியாக பேசிக்கொண்டிருந்ததை மீண்டும் பார்த்துவிட்டார். அப்போதும், அதுகுறித்து கேட்டதற்கு சமாளித்தவாறே பதில் சொன்னாராம் ஆகாஷ்..
அப்போதுதான் தன்னை விட்டு ஆகாஷ் பிரிந்து செல்கிறான் என்பது சிந்துஜாவுக்கு தெரியவந்துள்ளது.. நம்பிக்கை துரோகம் செய்த ஆவேசத்திலும், தனக்கு கிடைக்காதவன், வேற யாருக்குமே கிடைக்ககூடாது என்ற கோபத்திலும், ஆகாஷை கொல்லும் அளவுக்கு துணிந்தார் சிந்துஜா.
பெட்ரோல்: இதற்காக, ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி, ஹேன்ட்பேக்கில் வைத்துக் கொண்டார் சிந்துஜா.. நேற்று, பூம்புகாருக்கு போலாமா? என்று ஆகாஷை அழைத்திருக்கிறார்.. ஆகாஷும் பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.. பீச்சிலேயே ஆகாஷ் கதையை முடித்துவிட நினைத்துள்ளார் சிந்துஜா. ஆனால், அங்கே அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
அதனால், பீச்சிலிருந்து பைக்கில் திரும்பி வரும்போது, வேண்டுமென்றே அந்த பெண்ணை பற்றின பேச்சை எடுத்துள்ளார் சிந்துஜா.. வழக்கம்போல், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது... மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டு வந்ததுமே, பைக்கை விட்டு ஆவேசத்துடன் இறங்கிய சிந்துஜா, பையிலிருந்து பெட்ரோலை எடுத்து, ஆகாஷ் மீது ஊற்றியதுடன், தன்மீதும் ஊற்றிக்கொண்டு, தீயை வைத்துவிட்டார்.
உடம்பெல்லாம் நெருப்பு பற்றிக்கொண்டு, வலி பொறுக்க முடியாமல், காவிரி ஆற்றுக்குள் கதறிக்கொண்டே ஓடினார் ஆகாஷ்.. ஆனால், ஆற்றில் தண்ணீர் இல்லாததால், தரையில் விழுந்துள்ளார்.. அப்போதும் ஆற்று மண்ணில் உருண்டு புரண்டுள்ளார..
ஆபத்தான நிலைமை: அதேபோல, சிந்துஜாவும் உடம்பில் தீப்பற்றிய நிலையில், ரோட்டில் ஓடியிருக்கிறார்.. இதைப் பார்த்த அங்கிருந்த கடைக்காரர் ஒருவர், போர்வையை தூக்கி வந்து, சிந்துஜா மீது போர்த்தி தீயை அணைத்துள்ளார்.. ஆனால், இருவருமே ஆளுக்கு ஒருபக்கம் விழுந்து பலத்த காயமடைந்தனர்..
இருவரையுமே அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவருமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை படுகாயத்துடன் மீட்ட பொதுமக்கள், முதலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.. அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், இப்போது திருவாரூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்..
பயணிகள்: முன்னதாக, இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார். பஸ் ஸ்டாண்டில், அத்தனை பொதுமக்கள் முன்பும், நேற்று மாலை 5.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.. பஸ்ஸில் இருந்த பயணிகள், கண்ணெதிரே நடந்த தீக்குளிப்புகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்..!!
ஆனால், இதே சம்பம் வேறு மாதிரியாகவும் சொல்லப்படுகிறது.. காதலர்கள் இருவரும் பைக்கில் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தபோது, பாலக்கரை என்ற இடத்தில் பைக்கை திடீரென நிறுத்த சொன்னாராம் சிந்துஜா..
எது உண்மை: உடனே ஆகாஷூம் பைக் நிறுத்தியிருக்கிறார். அப்போது பெட்ரோல் எடுத்து, சிந்துஜா, தன்னுடைய உடலில் மீது ஊற்றி தீ வைத்து கொண்டாராம். தன் கண் முன்னாடியே, காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் அலறித்துடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றார்.. அப்போது ஆகாஷூக்கும் தீப்பற்றியதாக சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆகாஷூக்கு 60 சதவீத தீ காயங்களும், சிந்துஜாவுக்கு 40 சதவீதமும் தீக்காயங்களும் உள்ளதாம்..!!
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications