மதிமுக மாவட்ட செயலாளரின் பதவியை பறித்த வைகோ.. எடப்பாடியை சந்தித்தது தான் காரணமா.. பின்னணி தகவல்
மயிலாடுதுறை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதிமுகவில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருக்கும் மார்கோனி ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியான நிலையில், அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருப்பவர் மார்கோனி. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இவர் ரகசியமாக சந்தித்ததாகவும் அதிமுகவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில், அவரை கட்சி பதவியை அதிரடியாக பறித்து வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

" மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளராக இருக்கும் மார்கோனி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மார்க்கோனியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மதிமுகவினர் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்கோனி பதவி பறிப்பு தொடர்பாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், " மார்கோனியின் தாயார் சீர்காழி நகராட்சி உறுப்பினராக இருக்கிறாராம். சீர்காழி நகராட்சி தலைவர் பதவி திமுக வசம் உள்ள நிலையில், நகராட்சியில் உள்ள மொத்த கவுன்சிலர் எண்ணிக்கையில் அதிமுக சேர்ந்தவர்கள் 5 பேரும் ஏனைய கவுன்சிலர்கள் மார்கோனியின் தாயார் ஆதரவாளர்களாக உள்ளார்களாம்.
எனவே, அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன் தனது தாயாரை நகராட்சி தலைவராக்க மார்கோனி எண்ணியுள்ளார். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மார்கோனி ரகசியமாக சந்தித்தாராம். அதிமுகவில் இணையவும் மார்கோனி திட்டமிட்டு இருந்தாராம். இந்த தகவல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காதுக்கு போய் உள்ளது. இதனால், டென்ஷன் ஆன வைகோ, மார்கோனியை கட்சி பதவியில் இருந்து தூக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது, அதிமுகவுடன் இணைந்து கொண்டு சீர்காழி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற மார்கோனி தாயார் திட்டமிட்டுள்ள நிலையில், தலைவர் பதவியை தக்க வைக்க திமுக ஆலோசித்து வருகிறது. அதிமுகவும் முட்டி மோதும் என்பதால் சீர்காழி நகராட்சியில் கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications