மயிலாடுதுறை நிவேதா.. டூவீலரில் வரும்போதே ரவுண்டு கட்டிய "பைக் ஷோரூம்".. அதுக்குன்னு இப்படியா? கொடுமை

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நிவேதா என்பவர் யார்? அவருக்கு என்ன நடந்தது? இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வர என்ன காரணம்?
தவணை பணம் கேட்டு மிரட்டும் போக்கு, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது. கர்நாடகாவில் 10 நாட்களுக்கு முன்புகூட, சித்தவ்வா பையனவரா என்ற பெண், ராஜு என்பவருக்கு தவணைக்கு பணம் தந்துள்ளார்.

தவணை பணம்: ஆனால், விவசாயியான ராஜுக்கு உடனடியாக தவணை பணத்தை புரட்ட முடியவில்லை. உடனே பணம் கொடுத்த பெண், ராஜூ, அவரது மனைவி துர்க்கவ்வா, மகன் பசவராஜ கோட்டாகி ஆகிய 3 பேரையும் வீட்டுக்காவலில் தொடர்ந்து 2 நாட்கள் வைத்திருக்கிறார்.. இந்த 2 நாட்களாக 3 பேருக்குமே சாப்பாடு தரவில்லை. குடிக்க தண்ணீர்கூட தரவில்லையாம்.

Mayiladuthurai

ஏற்கனவே பலமுறை வட்டிக்கு தந்த பெண்ணால் பலமுறை அவமானத்தில் புழுங்கி தவித்த ராஜு, குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, சித்ரவதை செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. இறுதியில், வீட்டிற்கு வந்து, விஷம் குடித்து தற்கொலையும் செய்து கொண்டார் ராஜூ.

சேலம்: நம்முடைய சேலம் மாவட்டம் வாழப்பாடி துக்கியம்பாளையம் என்ற இடத்தில் பிரசாந்த் என்ற கூலித் தொழிலாளி, தனியார் வங்கியில் வாரத்தவனை முறையில் கடன் வாங்கியிருந்தார். 770 ரூபாய் வாரத்தவணை கட்ட முடியாமல் போகவும, வங்கி ஊழியர் சுபா என்பவர், பிரசாத் வீட்டிற்கு அவரது மனைவியை, வங்கிக்கு பிணையாக அழைத்து வந்துவிட்டார்.

Mayiladuthurai

தனிநபர் கடன் என்றில்லை.. சில வங்கிகளும் இப்படி தவணை பெறுவதில் கடுமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தவகையில் மயிலாடுதுறையிலும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அவையாம்பாள்புரத்தை சேர்ந்த குமார் மனைவி நிவேதா.. 28 வயதாகிறது.. தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இவர் வேலை செய்கிறார். கடந்த 11ம் தேதி மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள, பைக் ஷோரூமிலிருந்து, தன்னுடைய கணவர் பெயரில் நிவேதா புதிய பைக் ஒன்றினை வாங்கியுள்ளார். 24 மாதம் தவணை செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து முன்பணமாக 6,900 ரூபாய் செலுத்திவிட்டு டூவீலரை வாங்கியுள்ளார்.
இதனிடையே குமார் டூவீலர் வாங்கி பணம் செலுத்தாதது தெரியவந்தது.. எனவே, பைக்கை திருப்பி ஒப்படைக்கும்படி அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி முருகமங்கலத்தை சேர்ந்த சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.. ஆனால், டூவீலரை குமார் ஒப்படைக்கவில்லை.

எனவே, நேற்றுமுன்தினம் ஆனந்ததாண்டவபுரம் அருகே நிவேதா பைக்கில் சென்றபோது சவுந்தரராஜன் வழிமறித்து தாக்கி, நிவேதாவின் ஆடையை பிடித்து இழுத்துள்ளார்.. அவரது உடைகளை கிழித்தெறிந்துள்ளார்.. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அறுந்ததாகவும் கூறப்படுகிறது..

கொடுமை: நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தில் நிவேதா அதிர்ச்சியுற்று உறைந்து போனார். இறுதியில் மயிலாடுதுறை போலீசார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் சவுந்தராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சில வருடங்களாகவே கந்துவட்டி அட்டகாசம் ஓரளவு குறைந்துள்ள நிலையல், மீண்டும் இதுபோன்ற எல்லைமீறல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.. இதற்கும் ஒரு கடிவாளத்தை நம்முடைய அந்தந்த மாநில அரசுகள் போட்டால் நல்லா இருக்கும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+