For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரி கரூர் அருகே மதிமுக ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

கரூர்: மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரி கரூர் அருகே மதிமுக மாணவர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாபேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக மாணவர் மன்ற மாநில செயலாளர் பி.சசிகுமார் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும். மீத்தேன் தீட்டம் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆதலால் தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

MDMK cadres protest against Methane project

மேலும் காவிரி டெல்டா பகுதியில் 11 லட்சம் ஏக்கர் நிலப்பாசனம் இல்லாமல் போய் விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 5 கோடி மக்கள் தண்ணீர் இன்றி தவிப்பார்கள்.

கர்நாடகா அணை அணை கட்டும் முயற்சியை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். இதற்கு மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காதபட்சத்தில் ம.தி.மு.க மாணவர் மன்றம் சார்பில் மிகப்பெரிய ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர் மன்ற நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் பவுன் ராஜ், கரூர் மாவட்ட மாணவர் மன்ற அமைப்பாளர் முகேஷ், பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளர் எம்.சோமசுந்தரம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.கே.சங்கப்பிள்ளை, இளைஞரணி செயலாளர் வடிவேல், மாணவரணி செயலாளர் கோபி உள்பட ஏராளமான ம.தி.மு.க வினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினர்.

English summary
MDMK cadres protested against Methane project in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X