தேர்தல் தோல்வி...ஜூன் 1-ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் ஜூன் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்பட்டார். தேமுதிக, தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மதிமுக போட்டியிட்டது.

மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 தொகுதிகளை கூட்டணிக் கட்சியினருக்கு வைகோ ஒதுக்கினார். இந்தக் கூட்டணி தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்துக்கு, அவர் போட்டியிட்ட உளூந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடமே கிடைத்தது.
இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் ஜூன் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதையடுத்து, அன்று காலை 11 மணிக்கு மாவட்டச் செயலர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறும்.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் சு.துரைசாமி தலைமை வகிக்கிறார். தேர்தலில் போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் பங்கேற்பர் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications