பாஜக அணியில் 8 சீட்டுக்குப் போராடிப் பார்த்து 7க்கு படிந்த வைகோ
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் 8 சீட்டுகளை வாங்கிவிட படாதபாடுபட்டு கடைசியாக 7சீட்டுக்கு வேறவழியே இல்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறது மதிமுக.
லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் முதலில் துண்டை போட்டு இடம்பிடித்தது மதிமுக. கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவதற்காக மாதக் கணக்கில் காத்திருக்கவும் செய்தது மதிமுக.
ஒரு கட்டத்தில் மதிமுகவை த்ராட்டில் விட்டுவிட்டது பாஜக. இதனால் கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர் ஒருவழியாக மதிமுகவையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

5ல் தொடங்கிய பாஜக
மதிமுக 12 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்தது. ஆனால் பாஜகவோ 5ல் ஆரம்பித்தது. 8-க்கும் குறைவான தொகுதிகள் எனில் பேசவே வேண்டாம் என்றும் மதிமுக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

7க்கு ஒப்புக் கொண்ட மதிமுக
அதன் பின்னர் பாஜக பெரும் போராட்டம் நடத்தி மதிமுகவை 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறது. இப்படி மதிமுகவை 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்ததில் இருவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றன ஊடக வட்டாரங்கள்.

ஜெத்மலானி காரணம்?
மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு மிக நெருக்கமான ராம்ஜெத்மலானி மூலம் 7 தொகுதிக்கு ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

நானே காரணம் -தமிழருவி
ஆனால் கூட்டணிக்கு 'ஏற்பாடு' செய்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனோ, தாமே வைகோவிடம் போராடி 7 சீட்டுக்கு சம்மதிக்க வைத்தேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
7 சீட்டுக்காகவா இத்தனை மாதம் போராடியது மதிமுக?
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications