வீதிக்கு வந்தது கூட்டணி முறிவு- இப்தார் நோன்பு விழாவில் விஜயகாந்த்தை புறக்கணித்தது மதிமுக
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை உறுதிப்படுத்தும் வகையில் மதிமுகவின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் அழைக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தமாகா, தேமுதிக ஆகியவை மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.

இருப்பினும் தமாகா, மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதாக போக்கு காட்டிக் கொண்டே மாற்று அணிக்கு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வரும் 24-ந் தேதியன்று மதிமுக சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கான அழைப்பிதழில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமாகா தலைவர் வாசன், இடதுசாரி தலைவர்கள் ஜி ராமகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் தேமுதிக இந்த அணியில் இருந்து வெளியேறிவிட்டது உறுதியாகி உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசனிடமும் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் வாசனோ, என்னை அழைத்தார்கள்.. நான் செல்கிறேன் என்றூ மட்டும் கூறினார்.
ஆக ஒரு விக்கெட் அவுட்!
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications