மதிமுக சார்பில் நவ.20-ல் மாநில சுயாட்சி மாநாடு- திமுகவுக்கும் அழைப்பு: வைகோ
மதிமுக சார்பில் நவம்பர் 20-ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அந்த மாநாட்டுக்கு திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை: மதிமுக சார்பில் நவம்பர் 20-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாநில சுயாட்சி மாநாட்டுக்கு திமுகவுக்கு அழைப்பு விடுப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் நவம்பர் 20-ம் தேதி சுயாட்சி மாநாடு நடைபெறும். தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, அகாலிதளத்தின் பாதல், கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள், வட கிழக்கு மாநிலங்களின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

கேடுகள் இழைக்கும் மத்திய அரசு
எந்தெந்த வகையில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது என்பது குறித்து மாநில சுயாட்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படும். மத்திய அரசு பல்வேறு கேடுகளை தமிழகத்திற்கு விளைவித்துள்ளது.

பல மாநிலங்களில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு
ஒரே மொழி, ஒரே கலாசாரம் என மத்திய அரசு செயல்படுகிறது. நவோதயா பள்ளிகளைத் திறக்க, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க மதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல மாநிலங்களில் இந்தியை எதிர்க்க வேண்டிய நிலை தற்போது அதிகமாகி உள்ளது.

மாநில சுயாட்சி மாநாட்டில் திமுக
மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தலைவர்களை அழைத்துள்ளோம். மாநில சுயாட்சியை ஆதரிக்கும் திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களையும் மாநாட்டுக்கு அழைக்கிறோம்.

கருணாநிதி பெயர் நீக்கம் தவறானது
பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை மாநில சுயாட்சி மாநாட்டுக்கு அழைத்துளோம். மாநில மொழிகளை ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சிவாஜி சிலை பீடத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி பெயரை நீக்கியது தவறு. இவ்வாறு வைகோ கூறினார். திமுகவின் முரசொலி பவளவிழா பொதுக் கூட்டத்துக்கு கருணாநிதி, ஸ்டாலின் ஆகியேரின் அழைப்பை ஏற்று வைகோ கலந்து கொண்டார். இதனடிப்படையில் மதிமுகைவ்ன் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வைகோ திமுகவுக்கு அழைப்பு விடுவதாக தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications