வைகோவுடன் மோதல்: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு தி.மு.க.வில் இணைந்தார்!
சென்னை: தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வைகோ விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
ம.தி.மு.க.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

இதுகுறித்து பாலவாக்கம் சோமு கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து சந்திக்கலாம் என்று வைகோ சில மாதங்களாக கூறி வந்தார்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்காகவே மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் தொடங்கப்பட்டுள்ளது; சட்டசபை தேர்தலில் அதி.மு.க.வே வெற்றி பெறட்டும் என்று வைகோ பேசினார்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ம.தி.மு.க. உதவி வருகிறது. தி.மு.க.,வில் இருந்து வைகோ விலகியபோது நானும் விலயகியது தவறான முடிவு என்பதை உணர்கிறேன். ஆகையால் தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு பாலவாக்கம் சோமு கூறினார்.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல்











Click it and Unblock the Notifications