ரஜினி அறிவிப்புக்காக ரசிகர்களை விட பெருமளவில் குவிந்த மீடியாக்காரர்கள்!
நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்புக்காக சென்னை போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபம் முன்பு மீடியாக்காரர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்புக்காக சென்னை போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபம் முன்பு மீடியாக்கள் குவிந்திருந்தன.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 6ஆம் நாளான இன்று தென் சென்னை மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.
அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். ஏற்கனவே ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.

இன்று முக்கிய அறிவிப்பு
இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என ஏறத்தாழ உறுதியானது. இந்நிலையில் தற்போதை சந்திப்பின் முதல்நாள் அரசியல் பிரவேசம் குறித்து 31ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

காலை 5 மணி முதல்..
இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் அறிவிப்பை கேட்பதற்காக காலை 5 மணி முதலே ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபம் முன்பு திரண்டிருந்தனர்.

குவிந்துள்ள மீடியாக்கள்
ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என தொலைக்காட்சிகளிலும் காலை முதல் சிறப்பு விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ரஜினியின் அறிவிப்பை கேட்க ரசிகர்களைவிடவும் அதிகளவில் மீடியாக்கள் குவிந்திருந்தன.

குவிந்துள்ள மீடியாக்கள்
ரஜினியின் வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபத்துக்கு முன்பு ஏராளமான மீடியாக்கள் திரண்டிருந்தன. அவர்கள் ரசிகர்களின் கருத்துக்களையும் கேட்டு ஒளிபரப்பி வந்தனர்.

நேஷனல் மீடியாக்களும் எதிர்பார்ப்பு
ரஜினியின் அறிவிப்புக்காக நேஷனல் செய்தி சேனல்களும் போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பு குவிந்திருந்தன. தென் சென்னை ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்து வரும் நிலையில் அவரது அறிவிப்பை கேட்க மாநிலம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்திருந்தனர்.

தனிக்கட்சி தொடங்கி போட்டி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தால் நடிகர் ரஜினிகாந்த். வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடவுள்ளதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications