வெள்ளம்: இன்று முதல் 3 மாவட்டங்களில் மாணவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
சென்னை: சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனையை பள்ளிக்கல்வித்துறை பொது சுகாதாரத்துறையுடன் இனைந்து மேற்கொள்ள உள்ளது.
மழை வெள்ள பாதிப்பையடுத்து சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் இம்மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இந்நிலையில் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏதும் ஏற்பட்டுள்ளதா என கண்காணிக்கும் வகையில் அரசு,அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பொது சுகாதாரத்துறையுடன் இனைந்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் நிறைவடையும் வரை இப்பரிசோதனை தொடரும்.

இதற்காக, மூன்று மாவட்டங்களிலும் 131 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுவில் ஒரு மருத்துவர், செவிலியர்,சுகாதார ஆய்வாளர் ஒருவர் இருப்பார். இவர்கள் அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை பரிசோதனை செய்வார்கள். மாணவர்களுக்கு நோய்தொற்று காணப்பட்டால் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படும், தேவைபட்டால் மேல் சிகிச்சைக்கும் பருந்துரை செய்யப்படும்.
மேலும், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பள்ளி வளாகத்தின் தூய்மை குறித்தும், குடிநீர் தொட்டி சரியாகப் பராமரிக்கப்படுகிறதா, குளோரின் சரியான அளவு கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications