மருத்துவக் கல்லூரி மாணவர் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
Recommended Video

சென்னை: சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் 7வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அய்யப்பன் தாங்கலில் வசித்து வந்தவர் நிகேஷ் நல்லப்பபிள்ளை. 22 வயதான இவர் இன்று காலை தான் தங்கியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மருத்துவக் கல்லூரி மாணவரான இவரது தற்கொலை குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் தற்கொலைக்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் நிகேஷ். அங்கு ராகிங் பிரச்சினை ஏதாவது இருந்ததா அல்லது காதல் தோல்வியா அல்லது குடும்பப் பிரச்சினையா என்பது குறித்து தெரியவில்லை. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications