வெள்ளம்...குரோம்பேட்டை மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் சேதம்
சென்னை: தொடர்ந்து பெய்த கனமழைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த மருந்து, மாத்திரைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.
சென்னை புறநகரில் பெய்த பலத்த மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. மழைநீர் உள்ளே புகுந்து விடாமல் இருக்க மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் மண்மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் அதையும் மீறி மருத்துவமனையின் கீழ் பகுதி முழுவதும் மழைநீர் புகுந்தது. பிரசவ வார்டு, பொது மருத்துவ பிரிவு, ரத்த பரிசோதனை பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடம் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த புற நோயாளிகளும் கடும் அவதி அடைந்தனர். மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளில் கட்டிலுக்கு கீழ் பகுதி முழுவதும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி இருந்தது. இதையடுத்து நோயாளிகள் அவசர அவசரமாக மாடி தளங்களுக்கும், மற்ற மருத்துவமனைகளும் மாற்றப்பட்டனர்.
தரைத்தளத்தில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியதால், அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள் பெரிதும் சேதமடைந்தன. மேலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகளும் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கி சேதமடைந்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications