ஸ்ரீதேவி என்னும் பொக்கிஷத்தை வழங்கிய மீனம்பட்டி.. தீரா இழப்பின் சோகத்தில் மூழ்கிய கிராமம்
ஸ்ரீதேவி பிறந்த ஊரான மீனம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர்.
Recommended Video

சென்னை: ஸ்ரீதேவி பிறந்த ஊரான மீனம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர். சிலர் அவரை கடைசியாக பார்க்க முடியவில்லையே என்று கூட கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சொந்த ஊர்
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில்தான் ஸ்ரீதேவி பிறந்தார். ஐயப்பன் - ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த போதும் அவர் அந்த கிராமத்திலேயே வளர்ந்து இருக்கிறார்.

சென்னை
சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க தொடங்கிய பின் சென்னைக்கு மாறினார். ஆனாலும் அவர் தனது ஊர் சொந்தங்கள் பலருடன் இணைப்பில் இருந்துள்ளார். சிலர் அவருடன் சென்னையில் தங்கியும் இருந்துள்ளனர்.

பாலுவுட் சென்றார்
அதன்பின்பாக பாலிவுட் சென்ற பின் இவருக்கும் ஊருக்குமான உறவு குறைந்தது. ஆனாலும் ஊரில் இருக்கும் சில சொந்தங்கள் மட்டும் அதன்பின்பும் கூட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர். அவரின் திருமணத்திற்கும் பின்பும் கூட சொந்தங்களுடன் பேசி இருக்கிறார்.

பார்க்க விருப்பம்
தற்போது அவரது கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். அவரை கடைசியாக பார்க்க கூட முடியவில்லையே என்றும் பலர் வருத்தமாக இருக்கிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications