For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி உட்பட 20 பேரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

மதுரை: மேலூர் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 20 பேர் வரும் 16ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆண்டு சட்டசபைத் தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது தடையை மீறி அழகிரி உட்பட 20 பேர் மேலூரை அடுத்த நயத்தான்பட்டி வல்லடிகாரர் கோவிலில் கூடியதாக கூறப்படுகிறது. இவர்களை வெளியேற்ற வந்த தாசில்தார் காளிமுத்து மற்றும் வீடியோ கிராபர் கண்ணனை அழகிரி உள்பட 20 பேர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.

Melur court summons M.K.Alagiri to appear in person

இது தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் தாசில்தார் காளிமுத்து புகார் அளித்தார். இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் அழகிரி உள்பட சிலர் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மகேந்திர பூபதி வழக்கின் விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதி ஒத்திவைத்தார். மேலும் அன்று அழகிரி உட்பட 20 பேரும் மேலூர் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
The Melur court has summoned former union minister M.K.Alagiri to appear in the court on 16th December, in thasiltar attack case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X