நான் என்ன பேசினாலும் மீம்ஸ் போடுறாங்கப்பா... ஃபீல் பண்ணும் அமைச்சர் ஜெயக்குமார்
ன்னைப் பற்றி மீம்ஸ் போடுவதற்காகவே சம்பளத்திற்கு ஆட்கள் வைத்துள்ளார் தினகரன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளித்துள்ளார்.
சென்னை: தான் என்ன பேசினாலும் அதை வைத்து மீம் போட்டு கிண்டலடிக்க சிலரை ஸ்டாலின், தினகரன் ஆகியோர் சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் வைத்துள்ளார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மழை குறித்த நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

வெள்ள மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இப்போது வரை சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தான் என்ன சொன்னாலும் அதை வைத்து மீம்ஸ் போடப்படுகிறது. திட்டமிட்டு மக்களை இதில் திசை திருப்புகிறார்கள். என்னை வைத்து மீம்ஸ் போடவே ஸ்டாலின், தினகரன் தலைமையில் ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
நான் பத்திரிகையாளர்களிடம் பேசிய செய்தி வந்தவுடன் அதை வைத்து எப்படி கிண்டல் அடிக்கலாம், மீம்ஸ் போடலாம் என இதற்காகவே தனியாகவே சம்பளம் கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்து இருக்கிறார்கள். ஸ்டாலின், தினகரன் மற்றும் இன்னொரு தரப்பு என மொத்தம் மூன்று கும்பல்கள் இதைச் செய்து வருகின்றனர்.
என்ன பேசினாலும் அதை வைத்து தவறாக மீம்ஸ் போடுவது, கிண்டல் அடிப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications