மனநலம் பாதித்தவர் மின்கோபுரத்தில் இருந்து குதிக்க முயற்சி - தீயணைப்புத்துறை அதிரடி மீட்பு: வீடியோ
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உயர் மின் கோபுரத்தில் ஏறிவிட்டு இறங்கத் தெரியாமல் தவித்தார். அவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
ராமநாதபுரம்: மனநலம் பாதிக்கப்பட்டவர் உயர் மின் கோபுரத்தில் ஏறி இறங்கத் தெரியாமல் குதிக்க முயன்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெயர் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், அங்கிருந்த உயர் மின் கோபுரத்தில் சரசரவென ஏறிவிட்டார். ஏறியவருக்கு எப்படி இறங்க வேண்டும் என்பது தெரியவில்லை. டவரின் உச்சியில் இருந்து குதிக்க முயற்சி செய்த அவருக்கு கீழே நின்றிருந்த ஒருவர் விரும்பினார்.

இதனால், அவரும் சரசரவென உயர் மின் கோபுரத்தில் ஏறினார். என்றாலும் மனநலம் பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு எப்படி கீழே இறங்குவது என்று அவருக்கும் தெரியவில்லை. இதனால் இரண்டு பேரும் டவரின் உச்சியில் நின்று கொண்டு தவித்து வந்தனர்.
இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மளமளவென டவரில் ஒருவர் பின் ஒருவராக ஏறினார்கள். பின்னர், மனநலம் பாதிக்கப்பட்டவரையும், அவரைக் காப்பாற்றச் சென்ற மற்றொருவரையும் கீழே இறக்கினார்கள்.
இந்த மீட்புக் காட்சிகள் சினிமாக் காட்சிகள் போல் பரபரப்பாக இருந்ததால், அந்தப் பகுதி மக்கள் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரும் மீட்கப்பட்ட பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications