ஆலந்தூர்- ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
சென்னை: சென்னையில் ஆலந்தூர்- விமான நிலையம் இடையே உயர்நிலைப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. விரைவில் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதில் தற்போது ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலந்தூர் - விமான நிலையம் இடையேயான உயர்நிலைப் பாதை பணி முடிவடைந்துள்ளது.

இந்த வழித் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஜூலை 28, 29-ஆம் தேதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வில் முழு திருப்தி இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மார்க்கத்தில் சோதனை ஓட்டம் இந்த ஆகஸ்ட் முழுவதும் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் பின்னர் பயணிகள் போக்குவரத்து தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதும், கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதன் மூலம் விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பயணிகள் விரைவில் வந்து செல்ல முடியும்.

அடுத்ததாக, சின்னமலை - ஆலந்தூர் இடையேயான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தட பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததும் சோதனை ஓட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications