திமுக ஆட்சிக்கு வந்ததும் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் - மு.க. ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை மெட்ரோ ரயில் விஸ்தரிக்கப்பட்டு அதன் கட்டணம் குறைக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை புறநகர் பகுதி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூவிருந்தவல்லி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, சென்னை வளர்ச்சிக்காக புது வாக்குறுதிகளை அவர் அறிவித்தார், அதில், குடிசை இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும். லண்டனில் இருப்பது போல் "ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம்" கொண்டு வந்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும்.
சென்னை மெட்ரோ விஸ்தரிக்கப்பட்டு அதன் கட்டணம் குறைக்கப்படும். 20 வருடத்திற்கும் மேற்பட்ட பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, இருக்கின்ற பேருந்துகளின் எண்ணிக்கையும், ஏ.சி. பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
போலீஸ் பூத்துகள் நிறுவப்பட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் ரோந்து அதிகரிக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய "மொபைல் ஆப்" வழங்கப்படும்.
மக்கள் நடமாடும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் உருவாக்கப்படும்.குடிநீரில் கழிவு நீர் கலப்பது அறவே தடுக்கப்படும்.
வில்லங்க சான்றில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் ஒற்றை சாளர முறையில் கட்டிடங்கள் கட்ட 60 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். வில்லங்கச் சான்றிதழ் கட்டண உயர்வு குறைக்கப்பட்டு.
அதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பீடு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக ஆட்சியில் நசுங்கி விட்ட கட்டுமானத் தொழிலை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications