கடல் போல காட்சி தரும் மேட்டூர் அணை.. விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேறுகிறது
மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
Recommended Video

மேட்டூர்: மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. மழையின் தீவிரம், வெள்ளப்பெருக்கு, உயர்ந்துவிட்ட நீர்மட்டம் காரணமாக 2-வது முறையும் நிரம்பி உள்ளது.
அணை நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து அதை வேடிக்கை பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு கருதி போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அணை நிரம்பி வழிவதாலும் தொடர்ந்து பெருமளவில் நீர் அணைக்கு வருவதாலும், 12 காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்குப் பருவ மழை
தென்மேற்கு பருவமழை கேரளாவிலும் கர்நாடகாவிலும் வெளுத்து கட்டி அந்த மாநிலங்களை வெள்ளக்காடாகவே மாற்றிவிட்டது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு, அதன்மூலம் மேட்டூர் அணை நிறைந்து வழிந்தது.

கர்நாடக அணை நிரம்பியது
அதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தமிழக விவசாயிகள் உச்சி குளிர்ந்து போனார்கள். தற்போது மீண்டும் அதே மாநிலங்களில் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

1.25 லட்சம் கன அடி நீர்
அணைக்கு தற்போது விநாடிக்கு 1.35 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து அபரிமிதமாக நீர் வரத்து உள்ளதால் வெள்ள அபாயம் விடப்பட்டுள்ளது.

ஆட்சியர் உத்தரவு
முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி பாயும் பகுதிகளான 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரோகினியும், காவிரியில் யாரும் இறங்கிட கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். ஆனாலும் மேட்டூர் அணை நிரம்பி வழிவதை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை செல்போனில் மக்கள் படம் பிடித்து செல்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications