90 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் மேட்டூர் அணை.. விவசாயிகளின் நீண்டகால கனவு நிறைவேறப் போகுது
மேட்டூர்: மேட்டூர் அணை 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தூர்வாரப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் அணையின் குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிகப்பெரிய அணையாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளின் பட்டியலிலும் மேட்டூர் அணை உள்ளது. காவிரியில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளாக டெல்டா பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு தொடங்கி 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கர்னல் எல்லீஸ் வடிவமைப்பின்படி 4.5 கோடி ரூபாய் மதிப்பில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த அணையின் உயரம் 120 அடி. நீளம் 1700 மீட்டர். 59.25 சதுர மைல் பரப்பில் இந்த அணையில் நீர் தேங்கி வைக்கப்படுகிறது. இந்த அணையில் 93.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடியும் இது கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் இருந்து பல்வேறு மாவட்டங்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் மண் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணை தூர்வாரப்படவுள்ளது.
மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையமும், நீர்வளத் துறையும் இணைந்து இந்த அணையைத் தூர்வாருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி மேட்டூர் அணையின் குறிப்பிட்ட பகுதியில் தூர்வாரப்படவுள்ளது.
சோதனை அடிப்படையில் அணையின் ஒரு பகுதியில் மட்டும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வாரப்படுகிறது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத் துறை ஏலம் கோரியுள்ளது. அனுமதி கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேட்டூர் அணையைத் தூர்வாரினால் 30 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கூடுதலாக சேமிக்க முடியும் என்பதால் அணையைத் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேட்டூர் அணையைத் தூர்வார 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications